நெஞ்சினை சல்லடை போடும் உன் நினைவுகளை நேசிக்கிறேன்
வஞ்சனை செய்த உன் வார்த்தைகளை கூட நேசிக்கின்றேன்
நஞ்சென ஊற்றெடுக்கும் உன் கனவுகளை யாசிக்கிறேன்
மிஞ்சிய உன் காதலை யாது செய்வது என யோசிக்கிறேன்
உயிரினைக் கூட உனக்கென எழுதத் துணிகிறேன
உயிரிலும் மேலாய் உன்னை நேசிப்பதால்
கண்களில் நிரம்பும் கண்ணீரை மறைக்கின்றேன்
மனதில் நிரம்பும் சொற்களைத் தான் மெல்கின்றேன்
வார்த்தைகள் வற்றிப்போனதை உணர்கின்றேன்
இருந்தும் உனக்காய் மட்டும் உயிரினை சுமக்கின்றேன்
உனைக் காணும் அந்த இறுதி நிமிடங்களை மட்டுமே
எனைச்சுமக்கும் இறைவனிடம் வேண்டுகின்றேன்
சொல்லாத அக் காதலை மட்டும் நேசிக்கின்றேன் .................... ...................